டெல்லியில் குரங்கு மனிதன்..அசாமில் கரடி மனிதன்
நல்பாரி:
அசாமின் சில கிராமங்களில் இப்போது "கரடி மனிதன்" தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளான்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் டெல்லி நகரத்தையை கலக்க ஆரம்பித்தான் ஒரு "குரங்கு மனிதன்". மக்கள் இந்தச்செய்தியை மறப்பதற்குள், அசாமில் "கரடி மனிதன்" தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன.
கரடி போன்ற ஒரு மிருகம் தங்களைத் தாக்கி, நகங்களால் தங்கள் உடம்பைக் கீறி விட்டது என்று, இதுவரைகுறைந்தது 20 பேருக்குமேல் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக, பூட்டிய வீட்டுக்குள்ளேயே எப்படியோ புகுந்து இந்தக் "கரடி" எங்களைத் தாக்கிச் சென்றுவிடுகிறது என்று கூறினார்கள் அந்த மக்கள்.
அசாமின் மேற்குப் பகுதியில் உள்ள நல்பாரி மற்றும் பார்பீடா மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களில்தான்இந்தக் "கரடி மனிதன்", மக்களைத் தாக்க ஆரம்பித்துதள்ளான்.
இதனால், டெல்லி மக்களைப் போன்றே, பெரிய பெரிய கம்புகளுடனும், அம்புகளுடனும் "கரடி மனிதன்"வேட்டையில் மக்கள் இறங்கியுள்ளனர்.
"கரடி மனிதன்" விஷயத்தை நம்ப முடியாவிட்டாலும், மக்களுடைய இந்தப் பய உணர்ச்சியைஅலட்சியப்படுத்திவிட முடியாது என்று கூறிய அம்மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர், "கரடி மனிதனை"க்கண்டுபிடிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தையும், காவல் துறையினரையும் முழுவீச்சில் ஈடுபடுத்தியுள்ளதாகக்கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications