பஸ் நிலையத்தில் புகுந்த யானை: பீதியில் மக்கள்
கோவை,:
பஸ் நிலையம் மற்றும் செக் போஸ்டில் புகுந்த ஒற்றை யானையால் திடீரென பதட்டம் ஏற்பட்டது. மக்கள்அலறியடித்துக் கொண்டு ஓடி ஒளிந்தனர்.
கடந்த சில நாட்களாவே கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் யானையின் அட்டகாசத்தால் பொதுமக்கள்அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வெள்ளியன்று காட்டுக்குள் இருந்த ஒரு யானை ரோட்டில் நடந்து வரத்தொடங்கியது.
கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள ஆனைகட்டி கிராமத்தில் உள்ள செக் போஸ்ட் பகுதியில் இந்தயானை வந்தபோது, அங்கிருந்த அனைவரும் பீதியில் உறைந்தனர். அந்த யானை ஒற்றை யானையாக வந்ததால்,மதம் பிடித்த யானையாக இருக்கலாம் என மக்கள் அஞ்சினர்.
எனவே, கடைகள் மற்றும் செக் போஸ்ட் ஆகியவற்றின் கதவுகளை இழுத்து மூடி விட்டு யாரும் வெளியில் தலைகாட்ட வில்லை. அரை மணிநேரத்திற்குப் பிறகு யானை சென்றது. அதன் பின்னரே மக்கள் நிம்மதிப் பெரு மூச்சுவிட்டனர்.
இன்னும் சில இடங்களில் இந்த யானைகள் மக்களின் குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளது. வீட்டின் ஓடுகளைஉடைத்து நாசப்படுத்தியது. சில இடங்களில் மின்வேலிகள் போடப்பட்டிருந்தாலும் அவற்றையும் பிடிங்கி வீசிச்சென்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் கூட்டத்தைக் கலைக்க வனத்துறையினர் "ஆபரேஷன் ஜம்போ என்றஅதிரடித் திட்டத்தை உருவாக்கி யானைகளை விரட்டினர். ஆனால், மீண்டும் இந்த யானைகள் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications