வீரப்பனின் கூட்டாளிகள் 3 பேர் கைது
சேலம்:
கொளத்தூர் அருகே வனப் பகுதியில் மான் பிடிக்கச் சென்ற 3 பேரை அதிரடிப்படை படையினர் கைது செய்தனர்.இவர்கள் வீரப்பனின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கொளத்தூர் வனப் பகுதியில் மான் வேட்டைக்கு கருங்கல்லூரைச் சேர்ந்த ஒரு கும்பல் காட்டுக்குள் நுழைந்தது.இந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் வனப் பகுதியில் முள்ளம்பன்றி, முயல், மான் போன்ற விலங்கினங்களைவேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றினர்.
இவர்களை வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கண்டு, அவர்களைச் சுற்றி வளைத்தனர்.இதையடுத்து அந்தக் கும்பல், தப்பியோட முயன்றது. இதில், 3 பேர் தப்பி தலைமறைவாகி விட்டனர். 3 பேர்மாட்டிக் கொண்டனர்.
கருங்கல்லூரைச் சேர்ந்த குழந்தைசாமி (40), ரங்கசாமி (35), தங்கராஜ் (23) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் மான், முள்ளம்பன்றி இறைச்சிக்காக வேட்டையாட வந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில்குழந்தைசாமி காயத்துடன் இருந்துள்ளார். இவர்களை அதிரடிப்படையினர் தாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.ஆனால், இவர்களைப் பிடித்த அதிரடிப்படையினர், தப்பியோடிய குழந்தைசாமி 15 அடிப் பள்ளத்தில் விழுந்ததால்காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். காயமடைந்த குழந்தைசாமி மேட்டூர் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைசாமி தாக்கப்பட்டதாக செய்தியை அறிந்த கருங்கல்லூர் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று பொதுமக்களைக் கட்டுப்படுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications