ஆற்காடு வீராசாமி தம்பி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொழில் அதிபரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பிதேவராஜன் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் தேவராஜன். முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமானஆற்காடு வீராசாமியின் தம்பி. இவரும், ஆனந்த், ஜானகிராமன் ஆகிய இருவரும் சேர்ந்து, செனாய் நகரைச் சேர்ந்ததொழிலதிபர் ஜெகதீசனை அணுகினர். ஜெகதீசன் எஸ்.எம்.இன்டஸ்ட்ரீஸ் என்ற பழைய இரும்புப் பொருள்விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஜெகதீசனை அணுகிய 3 பேரும், ஒரு லாரி லோடுக்கு ரூ. 400 மாமூல் தர வேண்டும் என்று கூறி ஜெகதீசனைமிரட்டியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக 13, 14 மற்றும் 25 ஆகிய தேதிகளில் டாடா சுமோ காரில் வந்துமிரட்டியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஜெகதீசன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்படி தேவராஜன் உள்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள் 3 பேரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள தேவராஜன் செவன்ஸ்டார் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுதவிரபல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறார்.

தேவராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுகவினர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்புகுவிந்தனர். உடனடியாக தேவராஜனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

திமுக ஆட்சி போய் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கைதாகும் இரண்டாவது திமுக பிரமுகர் தேவராஜன்என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கைதானவர் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+