கலைக்கப்படுமா தனி நீதிமன்றங்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நீதிமன்றங்களுக்கு பதவி நீடிப்புவழங்கப்படுமா என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்று பதவியிழந்த பிறகு, அவர் மீது பல ஊழல் புகார்கள்சுமத்தப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிப்பதற்காக 3 தனி நீதிமன்றங்களை 1997ம் ஆண்டு ஏப்ரல்மாதம் அமைத்தது அப்போதைய தமிழக அரசு. இதை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுசெய்யப்பட்டது.

இதையடுத்து 1998ம் ஆண்டு முதல் தனி நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கின.

இங்கு 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றில் சில வழக்குகளைத் தவிர பிற வழக்குகள்இன்னும் நிலுவையில் உள்ளன.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியுள்ளார். எனவே தனி நீதிமன்றங்களில்தொடரப்பட்ட வழக்குகளின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தனி நீதிமன்றங்களின் பதவிக்காலம் முடியப் போகிறது. அதற்கு நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லதுகலைக்கப்படுமா என்ற சர்ச்சை இப்போது பெரிதாகியுள்ளது.

பொதுவாக, தனி நீதிமன்றங்களின் பதவிக்காலம் ஒரு ஆண்டுதான். 1997க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும்அவற்றுக்கு பதவிநீடிப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன்முடிவடைகிறது.

அதற்குப் பிறகும் தனி நீதிமன்றங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படுமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர்கேள்வி.

கடந்த மாதமே, பதவிக்கால நீட்டிப்பு குறித்த நினைவூட்டல் கடிதம் அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அரசுத்தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. ஒருவேளை பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிடப்படாவிட்டால் பதவிக்காலத்திற்குப் பிறகு, 3 மாதம் வரை நீதிமன்றங்கள் செயல்பட முடியும். அதற்குப் பிறகு அவை தானாகவேகாலாவதியாகி விடும்.

தனி நீதிமன்றங்களின் பதவி நீட்டிப்புக்கு அதிமுக அரசு உத்தரவிடாது என்றே கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+