குஜராத்தில் புயல்: தயார் நிலையில் முப்படைகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தைக் கடும் புயல் தாக்க இருப்பதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளுக்காகவும், உதவிப் பணிகளுக்காகவும்நாட்டின் முப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் குஜராத்தைத் தாக்கவிருக்கும் புயல் காரணமாக ஏற்படவிருக்கும் பெரும் சேதத்தைத்தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு அமைச்சகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பூகம்பம் உள்பட தற்போது ஏற்பட்ட பல இயற்கைச் சீரழிவுகளின்போது மேற்கொள்ளப்பட்ட மீட்புநடவடிக்கைகள் எங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளன. அதனால் இந்த முறை ஏற்படவிருக்கும் சேதம்பெருமளவில் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஒரு அதிகாரி.

குஜராத்தைப் புயல் கடுமையாகத் தாக்கும் பட்சத்தில், கடற்படையும் விமானப்படையும் இதுவரை இல்லாதஅளவுக்கு மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்காக விமானப்படை பல விமானப்படை ஹெலிகாப்டர்களும், விமானங்களும், கடற்படைக்கப்பல்களும், ராணுவ வாகனங்களும், தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை காலையில் புயல் கரையைக் கடக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+