பந்தாடப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்
சென்னை:
ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் துணை நடிகர்கள்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர் என்று தாமரைக்கனி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிமாறியவுடன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கைதான்.
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் திறமையான பல ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்த போது அலெக்சாண்டர் போன்ற திறமையானஅதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இப்போது நிலைமையே தலைகீழ்.
மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் நிலைக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள்தள்ளப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் இந்த சிறுபிள்ளைத்தனமான ஆட்சியால் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. இப்போது குழப்பம்மிகுந்த ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. விவரம் புரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாகியுள்ளனர் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications