நெய்வேலி அனல்மின் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு விட்டது.

கடந்த 15 நாட்களாக நெய்வேலி மின் உற்பத்தி நிலைய தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பலகோரிக்கைகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்கினர்.

தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக நெய்வேலியில் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால்,தமிழகத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன், நெய்வேலி மின் கழக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். இருப்பினும் எந்தவிதஉடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாடுஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.

பணிக்கேற்ற ஊதியம் என்ற நிர்வாகத்தின் யோசனையை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்துவேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

தொழிலாளர்கள் முழு அளவில் வேலைக்குத் திரும்பினர். இரண்டு மின் உற்பத்தி ஆலைகளும் இயங்கத்தொடங்கியுள்ளன. விரைவில் முழு அளவில் மின் உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மின் சீர்குலைவு முடிவுக்கு வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+