கோவை கமிஷனராக நரேந்தர் பால் சிங் பதவியேற்பு
கோவை:
கோவை புதிய போலீஸ் கமிஷனராக நரேந்தர் பால் சிங் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று சென்னை செல்கிறார். கோவையில் வெடிகுண்டுசம்பவங்கள் நடந்த பிறகு போலீஸ் கமிஷனராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். சிறப்பான இவரதுபணியால் கோவையில் அமைதி ஏற்பட்டது.
கடந்த திமுக ஆட்சி காலம் வரை கோவையில் அமைதியை நிலைநாட்டி மக்களின் பாராட்டைப் பெற்றவர்ராதாகிருஷ்ணன். இவருக்கு பதவி உயர்வு அளித்து சென்னைக்கு மாற்றம் செய்துள்ளது தற்போது புதிதாகப்பொறுப்பேற்றிருக்கும் அதிமுக அரசு.
கோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக, தற்போது நரேந்தர் பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலை கூறியதாவது:
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவரது பணிகள் தொடரும். எந்தப்பிரச்சினையையும் முதலில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். தீர்வு காண முடியவில்லை என்றால், கடும்நடவடிக்கை மூலம் தீர்வு காணப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications