தமிழகத்துக்கு கச்சத்தீவு கிடையாது: இலங்கை அமைச்சர்
கொழும்பு:
தமிழகத்துக்கு கச்சத்தீவைக் கொடுக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் மக்ந்தாதஜபக்சே திங்கள்கிழமை கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மறைந்த இந்திராகாந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது, 1974ஆம் ஆண்டு கச்சத்தீவுஇலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. சர்வதேச அமைப்பும் அதை இலங்கையின் ஒருபகுதியாக அங்கீகரித்துவிட்டது.
அதனால் மீண்டும் கச்சத்தீவை இந்தியாவுக்கு அளிப்பதென்பது இயலாத காரியம்.இந்த முயற்சி மிகவும் சிக்கலானது; பிரச்சனைக்குரியதும்கூட.
இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையேயுள்ள மீனவர் பிரச்சனையைப்பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வதுதான் நியாயமாகும். கச்சத்தீவைஇந்தியாவுக்குக் கொடுப்பதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்றார் இலங்கைஅமைச்சர்.
கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து பெறுவோம் என்று கடந்த மே 25ஆம் தேதிதமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது தெரிவிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications