உ.பி.யில் பஸ் மீது ரயில் மோதல்: 16 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
லக்கீம்பூர் (உத்தரப்பிரதேசம்):
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூர் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் பஸ் மீது ரயில் மோதியதில் 16 பேர்உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
லக்கீம்பூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலியா-புஸ்ரக் ஆளில்லாத ரயில் பாதையில் மிலானி,லக்னோ எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பக்கவாட்டில் வந்த பஸ் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நடந்தது.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications