ராஜ்யசபை தேர்தல் .. 4 இடங்களில் போட்டியிட அ.தி.மு.க திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜூலை மாதம் ராஜ்யசபைக்கு நடக்கவுள்ள தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவேண்டும். இதில் நான்கு இடங்களில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து ராஜ்யசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஓய்வுபெறுபவர்கள் பட்டியல்: ஜெயந்தி நடராஜன் (த.மா.கா), வி.பி.துரைசாமி (தி.மு.க), மார்க்கபந்து, ஓ.எஸ்.மணியன்(அ.தி.மு.க), மஸ்தான், ராஜேந்திரன் (அ.தி.மு.கவில் இருந்து விலகி தனித்து செயல்படுபவர்கள்) ஜூலை மாதம்ராஜ்யசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளதால் அ.திமு.கவின் கை ஓங்கியுள்ளது. எனவே 6 இடங்களில்நான்கு இடங்களை கைப்பற்றும் நிலையில் அ.தி.மு.க. வலுவுடன் உள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் ஒருஇடத்தில் தி.மு.க. வெற்றி பெற முடியும். மற்றொரு இடத்தில் த.மா.கா. போட்டியிடலாம்.

தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு ராஜ்யசபா எம்.பியைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. பிறமாநிலங்களில் இது வேறுபடும்.

அ.தி.மு.கவுக்கு சட்டசபையில் 132 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 3 இடங்களில் போட்டியிடுவதில் அ.தி.மு.கவுக்குசிரமம் இல்லை. ஆனால் 4 இடங்களில் போட்டியிட அ.தி.மு.க மும்முரமாக உள்ளது. 4-வது எம்.பியைத்தேர்ந்தெடுக்க வேண்டுமானால், மேலும் 4 ஓட்டுக்கள் அ.தி.மு.கவுக்குத் தேவை. கூட்டணிக் கட்சிகளின்உதவியுடன் அதைப் பெற அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது. எனவே அ.தி.மு.க சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு பெறும்வாய்ப்புள்ளது.

மீதமுள்ள 2 இடங்களில் தி.மு.க ஒரு இடத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. அக்கட்சிக்கு சட்டசபையில் 28இடங்கள் உள்ளன. அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏக்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்குஒரு எம்.எல்.ஏவும், எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவுக்க 2 எம்.எல்.ஏக்களும், தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப்பேரவைக்கு 2 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இதுதவிர உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 3 எம்.எல்.ஏக்களும்உள்ளனர். எனவே தி.மு.க கூட்டணிக்கு மொத்தம் 40 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே தி.மு.கவுக்கு ஒருஎம்.பி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடைசி ஒரு இடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கும் என்று தெரிகிறது. இக்கட்சிக்குசட்டசபையில் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், பாட்டாளிமக்கள் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன்தான் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற முடியும். இதில் பெரியபிரச்சினை எதுவும் இருக்காது என்று தெரிகிறது. ஆனால் வேட்பாளர் யார் என்பதில் தான் பெரிய சண்டையேநடக்கும் போலத் தெரிகிறது.

தற்போதைய எம்.பி. ஜெயந்தி நடராஜனே மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அதற்கு கட்சியில் பெரும்எதிர்ப்பு நிலவுகிறது. தனுஷ்கோடி ஆதித்தன், அழகிரி, ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் எம்.பி பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். வழக்கம் போல வேட்பாளர் தேர்வு விஷயத்தில் மூப்பனார் அமைதி காத்துவருகிறார். தேர்தலுக்கு முதல் நாளன்று வேட்பாளர் யார் என்று அவர் அறிவித்தாலும் ஆச்சரியம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+