ஆற்காடு வீராசாமியின் தம்பிக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
முன்னாள் அமைச்சர் வீராசாமியின் தம்பி தேவராஜின் உடல்நிலையை பரிசோதனை செய்ய அரசுமருத்துவமனையில் அனுமதிக்கும்படி, சென்னை மத்திய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் வீராசாமியின் தம்பி தேவராஜ், எஸ்.எம்.இண்டஸ்ட்ரியல் அன்ட் சப்ளையர்ஸ் என்ற தனியார்நிறுவன பிரதிநிதி ஜெகதீசன் என்பவரை மிரட்டியது தொடர்பாக மே 26 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிறுவனம் தாம்பரம் மெப்ஸ் நிறுவனத்தில் கழிவுப்பொருள்களை மொத்தமாக ஏலம் எடுப்பது வழக்கம்.இதற்காக இந்நிறுவனத்தினர் தேவராஜூக்கு மாமூல் பணம் கொடுத்து வந்தார்களாம்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்டதையடுத்து, தேவராஜூக்கு மாமூல் கொடுப்பதைஜெகதீசன் நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், ஜெகதீசனை மாமூல் கொடுக்கும்படி, மிரட்டினாராம்.
இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் தேவராஜ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குபுதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார் தேவராஜூக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைநிராகரிக்கப்படுகிறது. இந்த வழக்கு அடுத்த மாதம் 6 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கும்படி, மத்திய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதய நோய் பிரிவில் தேவராஜ் சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து டாக்டர்கள் முடிவு செய்வார்கள்என்றார்.
இந்த வழக்கில் ஜெகதீசனுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட ஆனந்த் மற்றும், ஜானகிராமன் ஆகியோர் தாக்கல்செய்த மனுக்கள் மீதான விசாரணையும் அடுத்த மாதம் 6 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
முன்னதாக நடந்த வழக்கறிஞர்கள் விவாதம் குறித்த விவரம் வருமாறு:
எதிர்தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம்:
தேவராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ 18 லட்சம் வருமானவரி கட்டி வரும் அவர்ரூ 400 கேட்டு மிரட்டியது ஏற்கத் தகுந்ததாக இல்லை.
அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன்:
வழக்கு குறிப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. வழக்குவிசாரணையை கோடை விடுமுறைக்குப்பின் வைக்க வேண்டும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications