வாடகை பிரச்சனை: ஊட்டி தமாகா அலுவலகத்தை பூட்டினார் உரிமையாளர்
ஊட்டி:
நீலகிரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் வாடகைப் பிரச்னையால் சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் எட்டிசன் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தஅலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கிடையாது. எனவே வாடகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது.
நீலகிரி மாவட்டத் தலைவராக உச்சிக்கவுடர் இருந்தவரை கட்சி அலுவலகத்தின் வாடகை, பராமரிப்பு மற்றும்டெலிபோன் கட்டணம் சரியாகச் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், சில நாட்களுக்கப் பிறகு உச்சிக்கவுடர்பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவர் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து புதிய மாவட்டத் தலைவராக பாலசுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்றநாளிலிருந்து 8 மாத காலமாக வாடகை செலுத்தப்படாமல் இருந்து வந்தது.
அலுவலகத் தொலைபேசியும் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்குள் தேர்தல் வந்து விடவே கட்சித்தலைமை வாடகையையும், டெலிபோன் கட்டணத்தையும் செலுத்தி சரி செய்தது.
தேர்தல் முடிந்த பிறகு கடந்த மாத வாடகை உள்பட இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது. இந்த பாக்கியைகட்சி செலுத்த முன்வரவில்லை. எனவே, இந்த அலுவலகக் கட்டட உரிமையாளர் பூட்டி சீல் வைத்தார்.இரண்டாவது முறையாக வாடகை பாக்கிக்காக சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications