என் மீது சர்க்காரியா கமிஷன் குற்றம் சுமத்தவில்லை: கருணாநிதி
சென்னை:
சர்க்காரியா கமிஷன் வீராணம் முறைகேடு உள்பட என் மீது எந்த விதமான குற்றச்சாட்டையும் கூறவில்லை எனதி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கருணாநிதி கூறுகையில், வீராணம் திட்டம் குறித்து ஜெயலலிதா என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள்அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.
ஜெயலலிதா சட்டசபையில் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர் உண்மை பேசுவதில்லை என முடிவெடுத்துவிட்டார் என தெரிகிறது.
ஜெயலலிதா நபார்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விவசாய நிலங்களின் மீது கட்ட வேண்டிய வட்டிக்கு விலக்குபெற்று விட்டார். அது குறித்து ஜெயலலிதா நபார்டுக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் மீது நான் குற்றம் சாட்டியதாககூறியுள்ளார். நான் அது மாதிரி குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை.
நான் கூறியது என்னவென்றால், சென்ற அ.தி.மு.க. அரசு நபார்டு வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்தஒப்பந்தத்தின்படி அ.தி.மு.க. அரசுக்கு விவசாய நிலங்களின் மீது வழங்கப்பட்ட கடனுக்கு வட்டி விலக்குஅளிக்கப்பட்டது எனதான் கூறினேன் என்றார். இந்த விவரத்தை அவர் சட்டசபையில் அவர் பேசிய பேச்சுகள்புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருந்த பக்கங்களிலிருந்து படித்து காட்டினார்.
எந்த விதமான வழக்கையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
புருஷோத்தமனும், கான்டிராக்டரும், அவரது சகோதரரருமான சத்யாநாராயணாவும் வாக்குமூலம்கொடுத்திருப்பதாகவும், எனக்கு லஞ்சம் கொடுத்ததால் வீராணம் திட்ட பணிகளை முடிக்க முடியாமல்சத்யநாராயணா வைரத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
சர்க்காரியா கமிஷன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை தி.மு.க. அரசு எதிர்த்தது. இது குறித்து தீர்மானம்ஒன்றையும் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்தை விலக்கிக் கொண்டால் தி.மு.க. அரசு மேலும் ஓராண்டு பதவியில் நீடிக்க அனுமதி அளிப்பதாகஅவர் கூறினார். நாங்கள் மறுத்ததும், ஜனநாயக முறையில் செயல்பட்டதற்காக என் மீது குற்றம் சுமத்தி விசாரிக்ககமிஷன் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா என்மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்த போவதாக கூறுகிறார். எம்.ஜி.ஆர். இறந்தது ஜானகிராமச்சந்திரன் கொடுத்த மோரை குடித்ததாலா அல்லது ஜெயலலிதா கொடுத்த பாலை குடித்ததாலா என்பது குறித்துவிசாரித்தால் நல்லது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications