சிறுவர்களை கொத்தடிமைகளாக்கிய எஸ்டேட் அதிபர்
நீலகிரி:
அதிக சம்பளம் தருவதாக ஏமாற்றி 14 சிறுவர்களைக் கொத்தடிமைகளாக மாற்ற முயன்ற எஸ்டேட் அதிபரைப்போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கருக்கியூர் உள்ளது. இங்கு வேன் ஒன்றுடன் வந்த ஒரு நபர், அங்குள்ள சிறுவர்களிடம்வால்பாறை எஸ்டேட்டில் வேலை இருப்பதாகவும், நாள் ஒன்றிற்கு ரூ.90 சம்பளம் கிடைக்கும் என ஆசைகாட்டியுள்ளார். இதை நம்பிய 14 சிறுவர்கள் வேனில் ஏறிச் சென்றனர்.
வால்பாறை சென்றவுடன் அவர்களுக்குப் போதுமான உணவு மற்றும் இருப்பிட வசதி அளிக்கப்படவில்லை. ஒருவார காலம் பொறுமையாக வேலை பார்த்த இந்த சிறுவர்கள், திடீரென போர்க்கொடி தூக்கினர்.
தாங்கள் வேலை பார்த்ததற்கான சம்பளத்தைக் கேட்டுள்ளனர். அதற்கு, வேனில் உங்களை அழைத்து வந்தசெலவுக்கும் இதற்கும் சரியாகி விட்டது என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுவர்களில் 3 பேர் , அங்கிருந்து தப்பி, கோவைக்கு நடந்தேவந்து சேர்ந்தனர்.
இவர்களைப் பற்றி அறிந்த போலீசார், கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, மீதமுள்ள சிறுவர்களையும் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஊட்டி குடியிருப்புக்குள் புகுந்த கழுகு.. முதுகில் மர்ம கருவியைப் பார்த்து ஆடிப்போன மக்கள் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications