இலங்கையில் 8 தமிழக மீனவர்கள் கைது
கொழும்பு:
தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததற்காக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இலங்கையின் பாதுகாப்புத் துறை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாதம் 2ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 8மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில், யாழ்ப்பாணம் பகுதியில் இளவெட்டிவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற் பகுதியில் அத்து மீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் மாதம் 18ம் தேதி, மே மாதம் 11,12 ஆகிய தேதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 39 மீனவர்கள் இலங்கைகடற்பகுதியில் அத்து மீறி நுழைந்தததற்காக கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து விடும் அபாயம் இருப்பதால்இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கைது செய்யப்படுகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தகாரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் யாரையும் சுடக்கூடாது என கடற்படை வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சில தினங்களுக்கு முன் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த்ரா ராஜபக்சே, மத்திய அமைச்சர்நிதிஷ்குமரை சந்தித்து மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications