தேவாரத்துக்கு மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தேவாரத்தை கூட்டு அதிரப்படைத்தலைவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்ததைக் கண்டித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகமக்கள் நல உரிமை கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல உரிமைக் கழகம் தெரிவிக்கையில், வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக முதல்வர்ஜெயலலிதா ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தேவாரத்தை நியமித்துள்ளார். இது சட்ட விதிமுறைகள்,கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்று கூறியுள்ளது.

ஈரோட்டில் மக்கள் நல உரிமை கழக சங்க செயலாளர் எஸ்.பாலமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், வீரப்பனைப்பிடிப்பதற்காக கூட்டு அதிரடிப்படையின் தலைவராக தேவாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்துநீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்.

1990 ம் ஆண்டு வீரப்பனைப் பிடிப்பதற்காக இவர் நியமிக்கப்பட்டிருந்த போது, அதிரடிப்படையில் இருந்த பலபோலீஸ்காரர்கள், வீரப்பனின் காட்டில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் உரிமையை மீறியதாகவும், அவர்களைத்துன்புறுத்தியதாகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதுகுறித்து சதாசிவா கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.பாதிக்கப்பட்ட தங்கம்மாள் என்ற பெண், தேவராத்துக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளார்.

1990 ம் ஆண்டு டிஜிபி தேவாரம் தலைமையில், வீரப்பனை சத்தியமங்கலம் காட்டில் தேடி வந்த பலபோலீஸ்காரர்கள் பழங்குடி மக்கள் பலரை துன்புறுத்தினார்கள். வீரப்பன் வேட்டையில் மலைப்பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடி மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்தத் தேடுதல் வேட்டையின் போது தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் பலரும்பாதிக்கப்பட்டனர்.

கூட்டு அதிரடிப்படை தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த தேவாரமும், கர்நாடகத்தைச் சேர்ந்த சங்கர் பித்ரியும்இருந்த போது பழங்குடி மக்கள் பலர் பாதிப்புக்குள்ளாயினர்.

கோபி மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் சதாசிவா கமிஷன்விசாரணையின் போது, தேவாரத்துக்கும், சங்கர் பிதரிக்கும் எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்வகையில் சதாசிவா கமிஷன் 1997 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷன் போலீஸ் அதிகாரிகள் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையைத் தடைசெய்யக்கோரி போலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை 31 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, சதாசிவா கமிஷனுக்குஎதிராக போலீஸார் தடை வாங்கியுள்ளனர். இந்தத் தடையை நீக்கி போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும்என்று வீரப்பன் தனது கோரிக்கையில் ஒன்றாகக் கூறியிருந்தார்.

இதையடுத்து சதாசிவா கமிஷனுக்கு எதிரான தடையை போலீஸார் தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.

பின்னர் அக்டோபர் மாதம் ராஜ்குமார் விடுதலையடைந்த பின்பு போலீஸார் மீண்டும் சதாசிவா கமிஷன்விசாரணைக்குத் தடை விதிக்குமாறு மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் தேவாரத்தை மீண்டும் கூட்டு அதிரடிப்படையின் தலைவராக நியமித்தது தவறாகும் என்றுகூறியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+