For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளத்தில் கலவரத்திற்கு 12 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

காட்மாண்டு:

நேபாளத்தில் திங்கள்கிழமை வெடித்த கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு மன்னர் பீரேந்திரா, ராணி ஐஸ்வர்யா உள்ளிட்ட ராஜ குடும்பத்தினர் 13பேரை இளவரசர் தீபேந்திரா சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

இளவரசர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கோமாவில் இருந்தார்.திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து தற்காலிக மன்னராக நியமிக்கப்பட்டிருந்த ஞானேந்திராமன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த செய்தி பரவியதும் காட்மாண்டுவில் கலவரம் மூண்டது. மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம் ஞானேந்திராஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திதான்.

ராஜ குடும்பத்தினர் யாரும் சுட்டுக் கொல்லப்படவில்லை. எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்துதான் அவர்கள்இறந்தார்கள் என ஞானேந்திரா கூறியிருந்தார்.

நாங்கள் அனைவரும் மன்னரை இழந்து துயரத்திலிருக்கும் போது மன்னர் குடும்பத்தினர் கொல்லப்பட்டது விபத்துஎன ஞானேந்திரா கூறுகிறார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தூக்கிலடப்பட வேண்டும் என மக்கள் கோபமாககூறினர்.

கலவரத்தை அடக்க போலீசார் தடியஐ நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. மக்களின் கலவரம்கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் துப்பாக்கிசூடும் நடத்தினர்.

வன்மூறையாளர்களை கலைக்க காட்மாண்டுக்கு அருகேயுள்ள பானேஷ்வோர் மற்றும் மய்டி தேவி பகுதியில்போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்ட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் வன்முறை பரவாமல் இருக்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் நேபாளத்தில். திங்கள்கிழமைஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்னராக பதவியேற்றுக் கொண்டுள்ள ஞானேந்திரா திங்கள்கிழமை வானொலி மூலம் அந்நாட்டுக்குமக்களுக்கு விடுத்த செய்தியில் கூறுகையில், நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த நிலையில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

ஷா பரம்பரையினர் மன்னராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். நாட்டை ஆளும்பொறுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது .

தலைமை நீதிபதி கேசவ் பிரசாத் உபாத்யாயா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ராஜ குடும்பத்தினர்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்யும். இந்த குழுவில் தலைமை நீதிபதியைத் தவிர தேசியசபையைச் சேர்ந்த தாராநாத் ரணவத் மற்றும் முக்கிய எதிர் கட்சியான நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்டமார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவு) தலைவர் மாதவ் குமார் நேபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X