2-வது மாடியிலிருந்து விழுந்த சிறுமி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து 5 வயது சிறுமி பலியானாள்.
சென்னை மந்தைவெளியிலுள்ள பெருமாள் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள்இந்திரா (5). பெருமாள் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது வீடு 2-வது மாடியில் உள்ளது.
செவ்வாய்க்கிழமை தனது வீட்டு மாடியில் உள்ள வராந்தாவில் இந்திரா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போதுமாடிக்கு அருகே வளைந்திருந்த முருங்கை மரக் கிளையைப் பிடிக்க முயற்சி செய்தாள். இதையடுத்துஎதிர்பாராதவிதமாக கால் சறுக்கி கீழே விழுந்தாள்.
மாடியிலிருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாள் இந்திரா. அவளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இந்திரா இறந்தாள்.












Click it and Unblock the Notifications