அரசு வழக்கறிஞர்களை ஏற்க அல் உம்மா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை ஏற்க அல் உம்மாவினர்மறுத்து விட்டனர்.

இதையடுத்து குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்தச்சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 167 அல்உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்தனர். இதில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா மற்றும்கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக குண்டு வெடிப்பு வழக்குகளுக்கெனதனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் பல அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சார்பில்வழக்கறிஞர்களை வைத்து வாதாட இயலாது, எனவே அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்கள் சார்பாக வாதாட இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞர்கள் அடங்கிய பட்டியல்அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். மேலும் தங்கள் கோரும்வழக்கறிஞர்களை அரசு செலவில் தங்கள் சார்பாக வாதாட நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அவ்வாறு ஏற்க இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கு நடப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், தற்போது கருணாநிதிநகரைச் சேர்ந்த 41 பேர் கோவை குண்டு வெடிப்பிற்கும் தங்களுக்கும் தொடர்புஇல்லை, நாங்கள் அப்பாவிகள், எனவே இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் எனகோரியுள்ளனர். எனவே, இது குறித்த விசாரணை வரும் ஜூன் 12 ம்தேதி நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+