எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு ஒரு இசை ஆல்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

"நலந்தானா?" என்ற தன்னார்வத் தொண்டு இயக்கம், சென்னை போர்டு கம்பெனி அளித்த நிதி உதவியுடன் இந்தஆல்பத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதைக் கருத்தில் கொண்டஇந்தத் தன்னார்வு இயக்கம், இப்படி ஒரு மியூசிக் ஆல்பத்தை வெளியிட முடிவு செய்தது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், நித்யஸ்ரீ, எஸ்.என். சுரேந்தர், எம்.எஸ். விஸ்வநாதன், ஓ.எஸ்.அருண், தேவி மற்றும் மகாநதி ஷோபனா என்று திரையுலகத்தின் முக்கியப் பின்னணிப் பாடகர்கள் இந்தஆல்பத்தில் பாடல்களைப் பாடியுள்ளனர்.

10 பாடல்கள் கொண்ட இந்த மியூசிக் ஆல்பத்தில், "அழகே அழகே ரசிக்கலாம்..." என்ற பாடலும் "நிலவைத்தொட்டுப் பார்த்த மனிதா..." என்ற பாடலும் ரசிக்கும்படி உள்ளன.

தமிழகத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள அனைத்துத் தன்னார்வத் தொண்டுஇயக்கங்களுக்கும் இலவசமாக இந்த ஆல்பம் விநியோகிக்கப்படும் என்று "நலந்தானா?"-வைச் சேர்ந்த அறிவழகன்கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+