சென்னை கமிஷனர் மீது பரிதி வழக்கு
சென்னை:
கோர்ட்டுக்குத் தவறான தகவலைக் கொடுத்திருப்பதால் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் வேப்பேரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை கோர்ட் அவமதிப்பு பிரிவின் கீழ் தண்டிக்கக் கோரி எழும்பூர் திமுகஎம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக பரிதி இளம்வழுதி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது எழும்பூர் தொகுதியில் நடந்த தேர்தல் மோதல் தொடர்பாக டேவிட்என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான் கைது செய்யப்பட்டேன்.
கைது செய்யப்பட்டதால் என்னால் எம்.எல்.ஏவாக பதவி ஏற்க முடியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 24-ம்தேதி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் எனக்கு ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டேன்.
ஆனால், மே 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை என்ஷ்ைரன போலீஸ் காவலில் எடுத்திருப்பதாகவும், ஜாமீனைரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை நகர போலீஸார் எனக்குக் கொடுக்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்காலதடை வாங்கினர்.
உண்மையில் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் நான் வேலூர் சிறையில்தான் இருந்தேன். எனவே பொய்யானதகவலை கோர்ட்டுக்கு அளித்து கோர்ட்டை அவமதித்து விட்ட சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் ஆகியோரை கோர்ட் அவமதிப்புபிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications