ஆற்காடு வீரசாமி தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தாக்கல் செய்த ஜாமீன் மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இரும்பு வியாபாரி ஒருவரிடம் கமிஷம் கேட்டு மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பிதேவராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் சென்னை முதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் தேவராஜனை ஜாமீனில்விடுவிக்கக் கூடாது என வாதாடினார்.
தேவராஜனின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேவராஜன் மீது பொய்யான வழக்கு போட்டிருப்பதாக கூறி அவரைஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதாடினார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சின்னப்பன் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில், தேவராஜனின்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications