பாத்திமா பீவியை நீக்க மாட்டோம்: அத்வானி
சென்னை:
தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர்எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
சென்னை வர்த்தக சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அத்வானி வெள்ளிக்கிழமை காலைவிமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ஜெயலலிதாவைதமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த பிரச்சனை தொடர்பாக தமிழக ஆளுனர் பாத்திமா பீவியைநீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
இது குறித்து பிரதமர் வாஜ்பாய் முன்னரே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாத்திமா பீவியை நீக்கமுடியாது என கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முடிவை தமிழக ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.இதில் மத்திய அரசுக்கு எந்த விதமான பங்கும் கிடையாது. இந்த பிரச்சனை குறித்து நீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்கவேண்டும். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
காஷ்மீரில் சர்வதேச பார்வையாளர் கண்காணிப்பில் தேர்தல் நடத்த வேண்டும் எண ஹூரியத் அமைப்புகூறியுள்ளது. அதுபோல் சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தேர்தல் நடத்த முடியாது.இந்தியா, காஷ்மீரில் நல்ல முறையில் தேர்தலை நடத்தியுள்ளது.
எனது சென்னை பயணத்தில் எந்த விதமான அரசியல் நோக்கமும் இல்லை என்றார். அத்வானி வர்த்தக சபைகூட்டத்திற்கு பின் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications