கோவையில் தொலைபேசி ஊழியர்கள் மீது கல்வீச்சு
கோவை:
திருத்தப்பட்ட டெலிபோன் பில்களை விநியோகிப்பதில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து, பொதுமக்கள் தொலைபேசிஊழியர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
தொலைபேசித் துறை சமீபத்தில் 5 மாத வாடகைக் கட்டணத்தை டெபாசிட்டாக செலுத்த வேண்டும் எனகூறியிருந்தது. பின்னர் இந்த வாடகைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. கட்டணம் ரத்து செய்யப்படுவதற்குமுன்பு எல்லோருக்கும் பில் அனுப்பப்பட்டது. கட்டண ரத்து செய்யப்பட்ட பிறகு திருத்தப்பட்ட பில்கள் விநியோகம்நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்த பில்களைப் பெற பொதுமக்கள் வியாழனன்று கூடினர். அப்போதுதொலைபேசித் துறை அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதனால் உடுமலை,வால்பாறை, பழனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்லஇயலவில்லை. எனவே, இவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த டெலிபோன் பில்கள் வழங்குவதில் ஊழியர்கள் தாமதப்படுத்தத் தொடங்கினர்.அலுவலக கேட் பூட்டப்பட்டது. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊழியர்களை நோக்கி கற்களால்எறிந்தனர். இதையடுத்து அலுவலர்கள் போலீசாரின் உதவியை நாடினர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களைச் சமாதனப்படுத்தினர். திருத்தப்பட்ட பில், விரைவில்தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தொலைபேசித் துறை அதிகாரி உறுதியளித்தார். இதையடுத்துபொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications