மீண்டும் இங்கிலாந்து பிரதமராகிறார் டோனி பிளேர்
லண்டன்:
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து மீண்டும் இங்கிலாந்தின் பிரதமராக டோனி பிளேர் பதவியேற்கிறார். இங்கிலாந்தில் மொத்தம் உள்ள659 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 634 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 413 தொகுதிகளை பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சிபெற்றுள்ளது. எதிர்க்ட்சித்தலைவர் வில்லியம் ஹேக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 164 இடங்களைப் பெற்றுள்ளது.லிபரல் டெமாக்ரடிக் கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
டோனி பிளேருக்கு வாழ்த்து:
தொழிலாளர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் வில்லியம்பிரதமர் டோனி பிளேரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற பிரதமர் டோனி பிளேர் கூறுகையில், கடந்த வருடங்களில் எப்படி இங்கிலாந்தின்முன்னேற்றத்துக்குப் பாடுபட்டேனோ அதே போல் இனிமேலும் பாடுபடுவேன். இங்கிலாந்து உலகத் தரம் வாய்ந்தநாடாக மாற்றுவதுதான் எனது குறிக்கோள்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் மேலும், மேலும் முன்னேறுவதற்கும், நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம்தீர்வதற்கும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர் கட்சித் தொண்டர்கள் மேற்கொள்வர்.
இதுதவிர கல்வித்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழிவகைகள்செய்து கொடுக்கப்படும். நாட்டில் குற்றங்கள் பெருகுவதைத் தடுக்கவும், குற்றவாளிகளின் செயல்பாடுகளைக்குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
1918 ம் ஆண்டு நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்காளர்களே வாக்களித்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தற்போது 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications