இதோ, ஒரு ஹை-டெக் விவசாயி!
சென்னை:
தேசிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் கழகத்தில் பொறியியலாளராக இருந்தவர் தற்போது விவசாயியாகஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
3 ஆண்டுகளுக்கு முன் பல பொறியாளர்களுடன் பூமியில் எண்ணெயை தேடி வந்த மாதவன் (வயது 38) என்னும்இஞ்சினியர் தற்போது இரண்டாவது பசுமைப் புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.
இவர் தான் பார்த்து வந்த வேலையை துறந்துவிட்டு வயல்வெளிகளில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மாதவன் நான் என்றுமே இஞ்சினியராக இருக்க விரும்பியதில்லை. நான் விவசாயத்தையே அதிகம் விரும்பின்ே.விவசாயியாக இருப்பதையே அதிகம் நேசிக்கிறேன் என்றார்.
முதல் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய சி.சுப்ரமணியத்தால் துவக்கப்பட்ட தேசிய விவசாய அறக்கட்டளையின்மூலம் இரண்டாவது பசுமைப் புரட்சியை துவக்கியிருக்கிறார் மாதவன் என்றால் அது மிகையாகாது
மாதவன், விவசாயிகளுக்கு மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உற்பத்தியை அதிகரிப்பது,நீர்பாசனம், அறுவடை போன்றவற்றில் பயன்படுத்த வேண்டிய பல புதிய உக்திகளை விவசாயிகளுக்குகூறிவருகிறார்.
1996ம் ஆண்டு மாதவன் சென்னைக்கு 60 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கரும்பாக்கம் என்ற இடத்தில் தேசியவிவசாய அறக்கட்டளையுடன் இணைத்தார். இதுவரை நெல்லும், கரும்புமே பயிரிட்டு வந்த மாதவன் தற்போதுசோளத்தை பயிரிட்டுள்ளார்.
1 ஏக்கர் நிலத்தில் மாதவன் 2000 கிலோ சோளத்தை விளைய வைத்துள்ளார். முன்னர் 1 ஏக்கர் நிலத்தில் 800 கிலோசோளம் மட்டுமே விளைந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன் உற்பத்தியை அதிகரித்து காட்டியிருப்பது தேசிய விவசாய அறக்கட்டளையின் முக்கிய குறிக்கோளானவிஞ்ஞான மூலமாக உற்பத்தி அதிகரிக்க வேண்டும் கொள்கையை நிறைவு செய்யும் விதமாக அமைந்துள்ளது.
தேசிய விவசாய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ராஜசேகரன் நிருபர்களுக்கு மதாவனின் விவசாயபண்ணையை சுற்றி காட்டினார். ராஜசேகரன் காலம் சென்ற சுப்ரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன் நிருபர்களிடம் கூறுகையில், எனது பெற்றோர்கள்தான் என்னை இஞ்சினியரிங் படிக்க வேண்டும் எனவற்புறுத்தி பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டனர்.
எனக்கு அதில் விருப்பம் இல்லை. நான் விவசாயியாகவே விரும்பினேன்.
தேசிய அளவில் 1 ஏக்கர் நிலத்தில் சராசரியாக 650 கிலோ சோளம் மட்டுமே விளைந்து வந்தது. அதை முறியடித்துஅதிக அளவில் சோளம் விளையவைத்து சாதனை படைக்க வேண்டும் என நினைத்தேன். அதை சாதித்து விட்டேன்என்றார்.
சுமார் 30 விவசாயிகள் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு தயராகி வருகிறார்கள். இவர்கள் உற்பத்தியைஅதிகரிப்பதற்கு மண்ணின் தரத்தை வளத்தை பெருக்கினால் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த முடியும் எனஉணர்ந்துள்ளனர். இவர்கள் மூலமாக இரண்டாவது பசுமை புரட்சி வரும் என நம்பலாம்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications