சந்திரிகா-நார்வே அமைச்சர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை வந்த நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் தோர்ஜோரன் ஜாக்லாந்த் இலங்கை அதிபருடனும்,பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடத்தியபின் நார்வே திரும்பினார்.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப்பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த வைக்கும் முயற்சியில் நார்வே தூதர் எரிக் சோல்ஹேம் ஈடுபட்டிருந்தார்.

தங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என விடுதலைப்புலிகள்கூறியதால் அமைதிப் பேச்சுவார்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதற்கான முயற்சியாக ஜாக்லாந்தும், சோல்ஹாமும்வியாழக்கிழமை இலங்கை வந்தனர்.

இவர்கள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசவுள்ளனர்.ஆனால் இவர்கள் விடுதலைப்புலிகளை சந்தித்து பேச மாட்டார்கள் என நார்வே தூதரக அதிகாரி டோமாஸ்ஸ்டான்ஜ்லான்ட தெரிவித்தார்.

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அதிபரையும், இலங்கை பிரதமரையும் சந்தித்து பேச்சு வார்த்தைநடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும்இடம் பெற்றிருந்தார்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எரிக் சோல்ஹேம் கலந்து கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த உடன்வெள்ளிக்கிழமை நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் நார்வே புறப்பட்டு சென்றுவிட்டார்.

நார்வே தூதரக அதிகாரி டோமாஸ் ஸ்டான்ஜ்லான்ட் சோல்ஹேம் பேச்சுவார்த்தையில் பங்கு பெறாததற்கானகாரணத்தை கூற மறுத்து விட்டார். நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரும், சோல்ஹேமும் நார்வே திரும்பிசென்று விட்டனர். அவர்கள் மீண்டும் உடனடியாக இலங்கை வரும் திட்டம் ஏதும் இல்லை என அவர் கூறினார்.

சோல்ஹேம் 15 மாதங்களாக இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவரது முயற்சியில் இதுவரை எந்த விதமான பலனும்ஏற்படவில்லை.

விடுதலை புலிகள் தங்கள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என கோரிவருகின்றனர்.ஆனால் இதற்கு இலங்கை அரசு மறுத்து விட்டதால் பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

ஆனால் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறாததற்கு ஒருவரை ஒருவர்குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுராத ரதவத்தே இலங்கை நாடாளுமன்றத்தில்வியாழக்கிழமை கூறுகையில், விடுதலைப்புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறிவருகின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களில் விடுதலைப்புலிகள் பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலைதீவிரப்படுத்தி வருகிறார்கள்.நார்வே உள்ளிட்ட சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளை, இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் விடுதலை புலிகள் அதற்கு உடன்படாமல் தொடர்ந்து தீவிரவாதநடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வரும் தாக்குதலில் விடுதைல புலிகள் தரப்பிலும், இலங்கை ராணுவ தரப்பிலும் 44பேரும், பல பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+