கல்லூரியில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி
கோவை:
பிளஸ் டூ பொதுத் தேர்தவில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களும் தற்போது திணற ஆரம்பித்துவிட்டனர்.
1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால்,பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடக்கும் பிளஸ் டூ பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 1200 ஆகும்.இதில், முன்பெல்லாம் குறைந்த அளவு மாணவர்களே 1000ம் மதிப்பெண்கள் பெறுவதுண்டு. இதனால், 1000மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றால் மருத்துவம், பொறியியல், விவசாயக் கல்லூரிகளில் இடம் பெற்று விடலாம்என்ற நம்பிக்கை மாணவர்களிடையே இருந்து வந்தது.
தற்போது இந்த நம்பிக்கை மாணவர்களிடையே தளர ஆரம்பித்து விட்டது. இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில்எளிதான கேள்விகள் இடம் பெற்றதால், நன்றாகத் தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண்களைக்குவித்துள்ளனர். ஏராளமான மாணவ, மாணவியர் 1000-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதனால், பொறியியல், மருத்துவம், விவசாயக் கல்லூரிகளில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கை பலரிடையேகுறைந்துள்ளது. எனவே, இப்போதே சில மாணவர்கள், நிவீன பாடத் திட்டங்களைக் கொண்ட பட்டப் படிப்பிற்கானவகுப்புகளில் சேரத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ், பி.சி.ஏ., பி.காம். (ஈ-காமர்ஸ்) ஆகியபட்டப்படிப்பிற்கான இடங்கள் பல சுயநதிக் கல்லூரிகளில் பூர்த்தியாகி விட்டன. இவை தவிர, பி.எஸ்சி. அப்ளைடுசயின்ஸ் (தகவல் தொழில்நுட்பம்), பி.எஸ்சி. அப்ளைடு சயின்ஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.எஸ்சி. அப்ளைடுசயின்ஸ் (சாப்ட்வேர் டெக்னாலஜி) ஆகிய பட்டப்படிப்புகளும் தற்போது அறிகமாகியுள்ளன. இவற்றிலும்மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு சேர ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சுய நிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில், 5 ஆண்டு பட்டப் படிப்புகளான எம்.எஸ்சி. சாப்ட்வேர்இன்ஜினியரிங், எம்.எஸ்சி. தகவல் தொழில் நுட்பம் ஆகிய பட்டப் படிப்பிற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பிளஸ் டூமுடித்தவுடனேயே நேரடியாக இந்த முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால்,இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும்இந்தப் பட்டப்படிப்பு உள்ளது.
கோவையில் கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால், இங்கு பயில கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள்அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால்,பெயர் போன கல்வி நிறுவனங்களில் நன்கொடை பெருமளவில்வந்து குவியத் தொடங்கியுள்ளது.
எனவே, மதிப்பெண்களை விட, நன்கொடைக்குத்தான் மதிப்பு உயர்ந்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. கல்வி கற்க அறிவு மட்டும் போதாது, பணபலமும் தேவை என்பது நிரூபணமாகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications