தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
காண்ட்ராக்டரை மிரட்டியதாகக் கூறப்பட்ட வழக்கில் தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. பரசுராமனை ஜாமீனில்விடுதலை செய்ய முடியாது என்று சென்னை செசன்சு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரோடு காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவர் கே.கே. நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருபுகார் கொடுத்தார். தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. பரசுராமன் சிபாரிசில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்பகுதிகளில் ரோடு போட ரூ.15 கோடிக்குக் காண்ட்ராக்ட் எடுத்ததாகவும், இதற்காக 5 சதவிகித கமிஷன்பரசுராமனுக்குக் கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், 5 சதவிகிதம் போதாது என்றும் மேலும் 5 சதவிகிதம் கமிஷன் வேண்டும் என்று தெய்வசிகாமணியைப்பரசுராமன் மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். இது தவிர, 10 பேர் தன்னைக் காரில் கடத்தி, கொலை மிரட்டல்செய்தனர் என்றும் தெய்வசிகாமணி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, கடந்த மே 26ஆம் தேதி பரசுராமன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு பரசுராமன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், இவ்வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று போலீஸ்தரப்பில் கூறப்படுவதால், பரசுராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தீர்ப்பு கூறினார்.
இதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 22ஆம் தேதி வரை பரசுராமனின் காவலை நீடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கில் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications