பொள்ளாச்சியில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளை
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் பட்டப்பகலில் மிளகாய் வியாபாரி வீட்டில் 70 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய்ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம்பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாஸ்திரி வீதி உள்ளது. இந்த வீதியில் மிளகாய் கடை வைத்திருப்பவர்ராஜேந்திரன் (35). இவரது மனைவி ஆனந்தி (30). கடைக்கு அருகிலேயே இவர்களுடைய வீடு உள்ளது.
ராஜேந்திரன் சனிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் வங்கிக்குச் சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளைவீட்டிற்கு எடுத்து வந்தார். ஞாயிறன்று ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், இந்த நகையை எடுத்துவந்திருந்தார். இதனை பீரோவில் வைத்து பூட்டி விட்டு இருவரும் கடைக்குச் சென்று விட்டனர்.
அப்போது பின்பக்க வாசலில் உள்ள பாத்ரூமின் கூரையை உடைத்து ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். பின்னர்,பீரோவை சாதுர்யமாகத் திறந்து., உள்ளே வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூாபாய்ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்த வழியாக தப்பி ஓடி விட்டார்.
வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்த ஒரு மணி நேரத்தில் இந்த நகை காணாமல் போனதால், இந்தத் தம்பதியர்அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில், பட்டப் பகலிலேயே நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதுகாவல்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications