ஊட்டி மலைக்கு புகையில்லா ரயில்!
ஊட்டி:
நீலகிரியில் பர்னஸ் ஆயில் முலம் மலைப் பாதையில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக வெள்ளோட்டம்விடப்பட்டது.
"உயிரே படத்தில் "தைய, தைய, தையா பாட்டு, ஊட்டி மலைப் பகுதியில் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்டது தான். நூறுஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் ஓடி வருகிறது. நிலக்கரியில் ஓடக்கூடியது இந்த ரயில்.
தினமும் இந்த ரயிலுக்கு 3.5டன் நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி தரமுள்ளதாக இருக்கவேண்டும். இதற்காகதற்போது ஒவ்வொரு நாளும் ரூ.15 ஆயிரம் செலவிடப்படுகிறது.
குன்னூர் வரை மட்டுமே நிலக்கரி நீராவி இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் குன்னூரிலிருந்து ஊட்டி வரைடீசல் இயந்திரம் மாற்றப்படுகிறது.
இந்த ரயில் தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு பகல் 12.35 மணிக்கு ஊட்டியைச் சென்றடையும்.இயற்கைக் காட்சிகளை மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இந்த ரயில் மெதுவாக மலைப் பாதையில் செல்கிறது.
தற்போது இந்த ரயிலின் இழுவைத் திறன் குறைந்ததையடுத்து இன்ஜினை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.எரிபொருள் செலவைக் குறைக்கும் பொருட்டு புதிய எரிபொருள் போட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான வேலையை திருச்சியில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரி ஏற்றுக் கொண்டது. 17 இன்ஜினியர்கள்சேர்ந்து இந்த இன்ஜினுக்குப் புதிய எரிபொருளை அளிக்க முடிவு செய்தனர்.
இதன் படி பர்னஸ் ஆயில் எனப்படும் ஒரு வகை எரிபொருளை இன்ஜினின் எரிபொருளாக மாற்றினர். ரூ.23லட்சம் செலவில் இந்த ரயிலுக்கு இன்ஜினின் பாராம்பரியத்தை மாற்றாமல் புது எரிபொருள் டேங்கைப்பொருத்தினர். இந்த எரிபொருள் டேங்க், 2500 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.
முதல் முதலாக ஞாயிறன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. புதிய எரிபொருளில் வெற்றிகரமாக இன்ஜின்செயல்பட்டதையடுத்து, இதே இன்ஜின் தொடர்ந்து இயக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications