திமுக-பாஜக உறவு உறுதியாக உள்ளது: வெங்கையா
சென்னை:
தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகளுக்கு இடையேயான உறவு உறுதியாக உள்ளது என்றும் இக்கூட்டணி எதிர்காலத்திலும்தொடரும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறுவது குறித்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கருத்துக்கள் யாவும்அரசின் கருத்துக்களே. அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், ஆளுநரைத் திரும்பப்பெறவேண்டும் என்ற மாநில பா.ஜ.க.வின் கோரிக்கை வாபஸ் பெறப்படவில்லை.
ஊழலுக்காக தண்டனை பெற்ற ஒருவர் முதல்வர் ஆகலாமா என்பது குறித்து தேசிய அளவில் விவாதங்கள்நடத்தப்பட வேண்டும்.
மாநில நன்மைக்காக எந்தவொரு முதல்வரும் மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக் கொள்ளவேவிரும்புவார். அது போலத்தான் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாசந்தித்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களில் அரசியல் குறுக்கே வராது. மாநிலங்களுக்கு உதவுவதில் மத்திய அரசும்எந்தவிதப் பாரபட்சமும் காட்டாது.
தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தொய்வும்இல்லை." மறு சிந்தனையும் இல்லை. இந்தக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். மக்கள் பிரச்சனைகளில் கூட்டணிக்கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் முதல்வராவதற்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.இதன்மூலம் அவை ஊழலை அங்கீகரிக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications