For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுகதான் அதிமுக, திமுகவுக்கு ஒரே மாற்று: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

அதிமுக-திமுக இரண்டு கட்சிகளும் திரிபுவாதக் கட்சிகளாகி விட்டன. இவைகளுக்கு மாற்று மதிமுக மட்டுமேஎன வைகோ தெரிவித்தார்.

கோவையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:

திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் மதிமுக பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக மீது மதிமுக வழக்குத் தொடர்ந்தது.அந்த வழக்கைச் சந்திக்கத் தயார் என திமுக தலைவர் கருணாநதி தெரிவித்திருந்தார். தான் பேசாத ஒன்றைபேசியதாகக் கூறி பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனகருணாநதி இப்போது கூறியுள்ளார். எனவே, அவர் "பேசாத ஒன்றை எனக் கூறியிருக்கும் பதிலே எனக்குத்திருப்தியை அளிக்கிறது.

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என திமுகவும், பாஜகவும் கூறியுள்ளன. ஆனால், ஆளுநரை மாற்ற வேண்டும்என்பது குறித்து அத்வானி என்ன கருத்து தெரிவித்துள்ளாரோ அந்த கருத்து தான் என்னுடைய கருத்தாகும்.

தேர்தலுக்குப் பிறகு அணிகளில் மாற்றம் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. எந்தக் கட்சியும் தங்களுடையநிலையில் இப்போது மாற்றத்தை ஏற்படுத்தாது என நினைக்கிறேன். பாஜகவுக்கு அதிமுக வரும் என்பதற்கோ,தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகும் எனபதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை. மதிமுகவும்அதிமுகவுடன் சேர எந்த வாய்ப்பும் இல்லை. மதிமுகவிற்கும் பாஜகவுக்கும் இடை ய நல்லுறவு நிலவி வருகிறது.இதில் சந்தேகம் இல்லை.

அதிமுகவும், திமுகவும் திரிபுவாதக் கட்சிகளாகத் திகழ்கின்றன. இவை தங்களுக்கு மாற்றுக் கட்சி இல்லை எனநினைத்துக் கொண்டுள்ளன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்குமே மாற்றாக மதிமுக உள்ளது. மதிமுக தனதுதனித்தன்மையை எப்போதும் இழந்துவிடாது. கடந்த 1993ம் ஆண்டு முதல் கொள்கைகளையும் லட்சியங்களையும்கட்டிக் காத்து வந்துள்ளது.

திமுக பற்றி நான் இப்போது எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்.

எதிரணியினர் மீது அதிமுகவினர் வழக்குத் தொடர்ந்து வருவதும், கைது செய்வது குறித்தும் நான் முழுமையாகஅறியாமல் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இதன் முழுவிபரம் அறிந்த பின்னரே தெரிவிப்பேன்.

அமைச்சர்களை மாற்றுவது முதல்வரது விருப்பம். புதிய ஆட்சி பற்றி இப்போதே கருத்து தெரிவிக்க முடியாது. 3மாதங்கள் ஆட்சி முடியட்டும். அதன் பின்னர் கருத்துச் சொல்கிறேன்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது அவரை மீட்க கடும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நிெடுமாறன், கல்யாணி உட்பட பலர் தூது சென்று வீரப்பனிடமிருந்துராஜ்குமாரை விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதற்காக அவர்களை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறுவதில் எவ்வித நியாயமும்இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு விசாரணை நடத்துவது தவறும் கூட. வீரப்பனைப் பிடிக்க தேவாரத்தைஅனுப்பவிருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் அவருடன் விஜயகுமாரும் இணைந்து இருப்பதும்வரவேற்கத்தக்கதுதான்.

விடுதலைப் புலிகள் உண்மையான உணர்வுடன் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். ஆனால், 3மாத காலத்திற்குள்எவ்வித முன்னேற்றத்தையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல்நாடுகளிலிருந்து அவர்கள் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர்.

மேலும் இப்போது நார்வே நாட்டு பிரதிநிதியான எரிக்சோலத்தையும் நீக்கி விட்டனர். அவரை இந்த அமைதிப்பேச்சுவார்த்தையிலிருந்து நீக்கியது பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லைஎன்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X