வழக்கில்லாத முஸ்லிம் கைதிகளை விடுவிக்க ஜெ. உறுதி
சென்னை:
தமிழகத்திலுள்ள பல சிறைகளில் வழக்கில்லாமல் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறுபான்மையின கைதிகளைவிடுவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளதாக தமாகா எம்எல்ஏவான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகம் முழுவதிலும் உள்ள பல சிறைகளில் நூற்றக்கணக்கான முஸ்லிம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலான கைதிகள் மீது எந்தவிதமான வழக்கும் தொடரப்படவில்லை.
தங்கள் மேல் வழக்கு ஏதும் இல்லாத நிலையில் இவர்கள் ஏன் சிறையிலேயே வாட வேண்டும்? ஆண்டுக் கணக்கில்சிறைக் கொடுமையை இவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இதனால் இவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்துக் கூறினேன். அவரும் இது சம்பந்தமாக, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்துள்ளார் என்று கூறினார் பாலசுப்ரமணியன்.
முன்னதாக, தமிழகத்திலுள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தியதுதொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், முன்னாள்டி.ஜி.பி. சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர அதிமுகவின் 117வது வார்டு செயலாளராக உள்ள ப்ரீத்தி பாஸ்கர் என்பவர்தான் இதற்கானமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கான விசாரணையை ஆகஸ்டு 10ஆம் தேதிக்குள் முடித்து, அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சென்னை 7வது பெருநரகமாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications