ஆசிரியர் இடமாற்றம்... திமுகவுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான அரசின் புதிய திட்டத்தால் கிராமப்புற பள்ளிகளின்செயல்பாடுகள் பாதிக்காது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக சார்பில் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஆசிரியர்கள் நகர்ப்பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் கிராமப்புறபள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் என்று திமுக அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த அச்சம் தேவையில்லாதது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கஅரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தால் கிராமப்புறப் பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று திமுககூறியிருப்பது தேவையில்லாதது.
கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நகர்ப்பகுதிகளுக்கு மாற்றப்படும்போது அவர்களுக்குப்பதிலாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகே கிராமப்புற ஆசிரியர்கள் தங்களது புதியபணியிடத்திற்குச் செல்ல முடியும்.
எனவே, கிராமப்புற ஆசிரியர்கள் மாற்றத்தால் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறுவது நியாயமில்லாததுஎன்று கூறியுள்ளார் தம்பித்துரை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications