சாப்ட்வேர் திருட்டு இல்லாத நகராகுமா பெங்களூர்?
பெங்களூர்:
சாப்ட்வேர் திருட்டுக்களைத் தடுக்க பெங்களூர் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்துள்ளது.
"சாப்ட்வேர் பைரசி" என்று அழைக்கப்படும் இந்தத் திருட்டுக்கள் உலகம் முழுவதும் சர்வ சாதாரணமாகவே நடந்துவருகின்றன. இது குற்றம்தான் என்று தெரிந்தும், கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்கள் கூட, நிறையசாப்ட்வேர்களைத் திருடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
சாப்ட்வேர் தொழில் தற்போது வெகு வேகமாக இறங்கி வருவதை அனைவருமே கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தஇறங்கு முகத்திற்கு சாப்ட்வேர் திருட்டும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதனால் சாப்ட்வேர்திருட்டை ஒழிப்பதும் சாப்ட்வேர் தொழிலுக்குத் தரப்படும் ஊக்கத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் "சிலிக்கன் வேலி" என்றழைக்கப்படும் பெங்களூரும் சாப்ட்வேர் திருட்டுக்கு விதிவிலக்கல்ல.பெங்களூரில் உள்ள பல கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்கள், "பைரேட்டட் வெர்சன்" சாப்ட்வேர்களைத்தான்பயன்படுத்தி வருகின்றனர்.
பெங்களூரில் 63 சதவீத அளவுக்கு சாப்ட்வேர்கள் திருடப்படுகின்றன. உலகிலேயே குறைந்த பட்சமாகஅமெரிக்காவில் 25 சதவீத சாப்ட்வேர் திருட்டு நடக்கிறது. இதுவே சீனாவில் 90 சதவீதமாகவும் ஹாங்காங்கில் 65சதவீதமாகவும் ஜப்பானில் 45 சதவீதமாகவும் உள்ளது.
இத்தகைய சாப்ட்வேர் திருட்டுக்களைக் களைய கர்நாடக அரசு தற்போது களத்தில் இறங்கியுள்ளது. முதல்வேலையாக, பெங்களூரில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்கள் முற்றுகைக்கு உள்ளாக உள்ளன. பெங்களூர்நகரப் போலீஸ் கமிஷனர்தான் சாப்ட்வேர் திருட்டு தடுப்பின் தலைமை அதிகாரியாக இருப்பார்.
இந்த சாப்ட்வேர் திருட்டைத் தடுக்க இப்போது முயலாவிட்டால், அது எப்போதுமே முடியாமல் போய்விடும் என்றுகூறப்படுவதால், போலீஸ் அதிகாரிகளும் கொஞ்சம் சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளது.
எப்படியாவது 2002ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் சாப்ட்வேர் திருட்டுக்களை முற்றுலுமாக முறியடித்து விடுவதுஎன்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது கர்நாடக அரசு. டெக்னிக்கலாகக் கஷ்டம்தான் என்றாலும், கொஞ்சம்ஆரம்பித்துவிட்டால் போதும், நம் போலீஸார் பிடி உடும்புப் பிடியாகிவிடும் என்று நம்புகிறது கர்நாடக அரசு.
நாட்டிலேயே பெங்களூரில் தான் அதிக அளவாக 928 சாப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன. இந்த அளவுக்குசாப்ட்வேரில் வளர்ச்சி அடைந்துள்ள இந்த நகரில்தான் சாப்ட்வேர் திருட்டுக்களும் அதிகமாகி விட்டது.
அதனால்தான், சாப்ட்வேர் திருட்டைத் தடுக்க, போலீஸார் அவசர அவசரமாக முடுக்கிவிடப் பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications