நக்ஸல் சத்யமூர்த்திக்கு காவல் நீட்டிப்பு
பவானி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் முன்னாள் கூட்டாளி கந்தவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளசத்தியமூர்த்தியை அடுத்தமாதம் 4ம் தேதி ஆஜர்படுத்துமாறு பவானி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் பர்கூருக்கு அருகேயுள்ள ஈரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனின்நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார்.
வீரப்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் வீரப்பனைவிட்டு பிரிந்து சென்றார்.
தன்னைப்பற்றி கந்தவேல் அதிரடிப்படையினருக்கு தகவல் கூறுவதாக சந்தேகப்பட்ட வீரப்பன் 1998ம் ஆண்டுநவம்பர் மாதம் தாளவாடி அருகேயுள்ள முதியனூர் வனப்பகுதியில் கந்தவேலை வீரப்பன் கும்பல் படுகொலைசெய்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தனக்கடத்தல் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மேக்கோ ரங்கசாமி,சந்திராகவுண்டர், கந்தசாமி, மாதேவ், நக்சல் சத்தியமூர்த்தி, தாளவாடியைச் சேர்ந்த காசீம் ஷெரீப் ஆகிய 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குவிசாரணை பவானி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை பவானி நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தியை ஆஜர்படுத்துவதாக இருந்தது.ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனால் அவர் ஆஜராகவில்லை.
எனவே அவரை அடுத்தமாதம் 4ம் தேதி ஆஜர்படுத்துமாறு பவானி மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications