தமாகா செயற்குழு கூட்டத்தில் ஜெ.வுக்கு புகழாரம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் பாராட்டி தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் தமாகா தலைவர் மூப்பனார் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேறின.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எம்எல்ஏக்களின் அமோக ஆதரவுடன் தமிழக முதல்வராகப்பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தமாகா தெரிவிப்பதாக ஒரு தீர்மானம் கூறுகிறது.
மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கும் தமாகா நன்றி கூறுவதாக மற்றொரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்றம் செய்வதில் புதிய செய்முறைகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியிருப்பது, விவசாயிகளுக்கான கடன்வட்டியையும் அபராத வட்டியையும் தள்ளுபடி செய்தது போன்ற அதிமுக அரசின் செயல்களைப் பாராட்டியும் ஒரு தீர்மானம்தமாகா செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெறவும் கட்சியைப் பலப்படுத்துவதற்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும்என்று தன் கட்சித் தொண்டர்களைத் தமாகா தலைவர் மூப்பனார் கேட்டுக் கொண்டார்.
"கட்சியின் செயல்பாடுகள் யாவும் மிகவும் தொய்வாக உள்ளன. இளைஞர்களுக்கு அதிக அளவு வாய்ப்பளிக்க வேண்டும். நாம்வலிமையாக இருந்தால்தான், உள்ளாட்சித் தேர்தலுக்கு நம்மை மதித்து உரிய இடங்களைத் தருவார்கள். அதிமுகவுடன் கூட்டணிதொடர வேண்டும். காங்கிரஸ்-தமாகா இணைப்பெல்லாம் வேண்டாம்" என்று கூட்டத்தில் பேசிய சிலர் குறிப்பிட்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications