கொலை வழக்கில் தந்தை-, 4 மகன்களுக்கு ஆயுள்
சேலம்:
சேலம் அருகே மரத்தை வெட்டிய தகராறில் ஏற்பட்ட கொலை வழக்கில், தந்தை மற்றும் 4 மகன்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், காட்டுநாயக்கன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (52). இவருக்கு இங்கு சொந்த நிலம்உள்ளது. இதே நிலத்திற்கு அருகில் அண்ணாமலை (61)என்பவரது நிலமும் உள்ளது.
மாதையன் நிலத்திற்கும் அண்ணமாலையின் நிலத்திற்கும் இடையே ஒரு மரம் இருந்தது. இந்த மரத்தை 1996ம்ஆண்டு மார்ச் 21ம் தேதி அண்ணாமலையும் அவரது மகன்கள் தங்கமணி (30), அபிமன்யு (25), பழனி (22) மற்றும்வேல்முருகன் (20) ஆகியோரும் சேர்ந்து வெட்டினர்.
இதனைக் கண்ட மாதையன் மார்ச் 23 ம் தேதி மரத்துண்டுகளை எடுத்துச் சென்று விட்டார். இதனால் அவருக்கும்அண்ணாமலையின் மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு ஊர்ப் பஞ்சாயத்தில்தீர்க்கப்பட்டது. இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தினர். ஆனால், இரு பக்கமும் பகை இருந்து வந்தது.
இந்நிலையில், மார்ச் 26ம் தேதி மாதையனுக்கும் அண்ணாமலைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுமுற்றி, அண்ணாமலையும் அவரது மகன்களும் சேர்ந்து மாதையனை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்தகாயமடைந்த மாதையன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அண்ணாமலை உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் தன்மை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், மாதையனைக் கொலை செய்ததாக குற்றம்நிரூபிக்கப்பட்டது.
இதனால், தந்தை அண்ணாமலை மற்றும் அவருடைய 4 மகன்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிதங்கக்கனி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications