வீரப்பனை பிடிப்பதில் கர்நாடகம் மெத்தனம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வீரப்பனைப் பிடிக்கும் பணியில் கர்நாடக அதிரடிப்படையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

கேரள போலீசாரும் இந்த வேட்டையில் ஈடுபடுவது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதுவீரப்பனுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம் எனத் தெரிகிறது.

வீரப்பனைத் தேடும் பணியில் தற்போது தமிழக அதிரடிப்படையினர் மட்டுமே முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.

கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக இருந்த சங்கிலியான் மாற்றப்பட்டு தற்போது கெம்பையாநியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தால் பல அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் கர்நாடக அதிரடிப்படையினரின் தேடுதல் வேட்டையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழக வனப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டிருப்பதால், தற்போது வீரப்பன் கர்நாடகவிற்குள் தப்பிச்செல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

கர்நாடக அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் தீவிரம் காட்டும்போது வீரப்பன் கேரள மாநில எல்லைக்குள்நுழைவது இயல்பு. எனவே இத்தகைய சூழ்நிலையில் மட்டுமே கேரள அரசின் போலீஸ் உதவி நாடப்படும்.ஆனால், இப்போது அந்த அவசியம் இல்லாததால், கேரள போலீசாரின் நிலை பற்றிய தகவல்கள் இல்லை.

கர்நாடக அதிரடிப்படையினர், அந்த மாநில எல்லைப்பகுதியில் குறைந்த அளவிலேயே உள்ளனர். இவர்களும்தங்களது தேடுதல் வேட்டையைத் துவக்கினால் மட்டுமே வீரப்பனைச் சுற்றி வளைக்க முடியும்.

எனவே, கர்நாடக அதிரடிப்படையினரின் சுணக்க நிலை நீடித்தால், வீரப்பன் தப்பிச் செல்லும் வாய்ப்புகள்தான்அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+