வெள்ளத்தில் தூண்கள் சேதமானதால் விபத்தா?

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு:

கடலுண்டி ஆற்றுப் பாலம் மூழ்கும் நிலையில் இருந்ததால்தான், மங்களூர்-சென்னை ரயில் விபத்தில் சிக்கியது என்று மத்திய ரயில்வேஅமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.

விபத்து நடந்த பகுதியை சனிக்கிழமை பகலில் பார்வையிட்ட நிதிஷ்குமார் மேலும் கூறியதாவது:

விபத்து ஏற்பட்ட கடலுண்டி ஆற்றுப் பாலத்தின் வயது 120 ஆண்டுகள் ஆகும். இப்பாலத்தில் உள்ள பல தூண்கள் சேதமடைந்து, ஆற்றில்அடித்துச் செல்லப்பட்டதால், அந்தப் பாலம் மூழ்கும் நிலையில் இருந்தது.

இந்த நிலையில்தான் மங்களூர்-சென்னை ரயில் அந்தப் பாலத்தில் சென்றபோது, அதன் பெட்டிகள் தடம்புரண்டு, ஆற்றுக்குள் விழுந்துவிட்டன என்று தெரிகிறது.

இருந்தாலும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, விபத்திற்கான முழு காரணமும் தெரிய வரும்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் அளிக்கப்படும். காயமடைந்துள்ளவர்களுக்கு அனைத்துவிதமருத்துவ உதவிகளும் அளிக்கப்படும் என்று கூறினார் நிதிஷ்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+