47 சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
கோழிக்கோடு:
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கடலுண்டி ஆற்றில் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 47 பேரின் சடலங்கள்கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேசெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த ரயில் விபத்து குறித்து நீண்ட விசாரணை நடத்துமாறும் தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி:
வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோழிக்கோடு கடலுண்டி ஆற்றில் மங்களூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலின் 8பெட்டிகள் தடம்புரண்டு விழுந்தன. இதில் இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கடற்படை வீரர்களும் மீட்புப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் விபத்து நடந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்தி:
ரயில்வே பாதுகாப்புத்துறை பெங்களூர் பிரிவு ஆணையர் பிரணாப் குமார் சென் தலைமையில் விபத்து குறித்து முதற்கட்ட நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
பிரணாப் சென் தலைமையில், ரயில்வேத்துறை மெக்கானிக்கல் பிரிவு, பொறியில் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணை முடியும் வரை அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட 60 சடலங்களில் 34 பேரின் உடல்கள் அடையாளம்கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தோரில் 222 பேர் பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 38 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications