கர்நாடகத்தில் தமிழக லாரி டிரைவர்-கிளீனர் படுகொலை
பெல்லாரி:
தமிழகத்திலிருந்து வேர்க்கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பெல்லாரி சென்ற லாரி டிரைவர் மற்றும் கிளீனர்ஆகியோர் அங்கு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த சனிக்கிழமை இரவு சேலத்திலிருந்து லாரி ஒன்று வேர்க்கடலை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம்பெல்லாரிக்குச் சென்று கொண்டிருந்தது.
லாரி பெல்லாரி அருகே ஒசஹள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்தஇன்னொரு லாரி தமிழ்நாடு லாரியை முந்திச் சென்றது.
அடுத்த நிமிடம் பின்னால் வந்த லாரியிலிருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாடு லாரியை மறித்து அதிலிருந்துடிரைவர் குரு, கிளீனர் சங்கர் மற்றும் மாற்று டிரைவர் பாலசுப்ரமணியம் ஆகியோரைக் கத்தி முனையில் மிரட்டியது.
அவர்களிடமிருந்து ரூ 8 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு மூன்று பேரையும் கத்தியால் குத்தி விட்டுத் தப்பித்துச் சென்றது.
படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டிரைவர் குரு, கிளீனர் சங்கர் ஆகியோர் சிறிது நேரத்தில்உயிரிழந்தனர்.
மாற்று டிரைவர் பாலசுப்ரமணியத்தை அவ்வழியே வந்த சிலர் தாவண்கரே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி டிரைவர் மற்றும் கிளீனரைக் கொலை செய்து அவர்களிடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்ற அக்கும்பல் ஹிந்தி மொழியில்பேசியதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த இரட்டைக்கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேர் கும்பலை ஒசஹள்ளி போலீஸார் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
