சாப்ட்வேர் வளர்ச்சியும்.. இந்திய அரசின் காதுகளும்
சான்டா கிளாரா:
அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க தொழில்துறையை பெரிதும் பாதித்துள்ளது. அந்நாட்டுசாப்ட்வேர் துறையும் பாதிக்கப்பட்டதால், இந்தியாவிலும் அந்த பாதிப்பு உணரப்பட்டு வருகிறது.
ஆனால், நீண்டகால நோக்கில் பார்த்தால் இந்த பாதிப்பால் இந்தியாவுக்கு லாபம் தான் என்கிறது ஒரு ஆய்வு.இந்தியாவில் திறமை மிகுந்த சாப்ட்வேர் நிபுணர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைப்பதால், அமெரிக்காவிலிருந்துமுக்கிய சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம் பெயரவும் அல்லது இந்தியாவில் அந்த நிறுவனங்கள்கிளைகளைத் தொடங்கவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் சாப்ட்வேர் தயாரிப்பில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றுகூறப்படுகிறது.
அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அங்கு சாப்ட்வேர் கம்பெனிகளும் டாட்கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் கம்பெனிக் கதவுகளை மூடினார்கள். அது மட்டுமில்லாமல்,அமெரிக்காவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த பல இந்திய சாப்ட்வேர் நிபுணர்களும் பெட்டியைக்கட்டிக் கொண்டு திரும்பவும் இந்தியாவிற்கே வந்துவிட்டனர்.
உற்பத்தியாகும் சாப்ட்வேர்களைக் குறைந்த விலைக்கு விற்ற காரணத்தாலேயே, அமெரிக்காவின் பொருளாதாரம்சரிவை நோக்கிச் சென்றதாகக் கூறுகின்றனர்.
அமெரிக்காவைக் கலக்கிக் கொண்டிருந்த இந்திய சாப்ட்வேர் நிபுணர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தற்போதுஇந்தியாவில் ஆஜர். பிறகு என்ன கவலை? பிரமாதமான சாப்ட்வேர்களை வடிவமைக்கத் தேவையான சாப்ட்வேர்நிபுணர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளனர்.
இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்காவே, தற்போது இந்தியாவை நோக்கித் தன்னுடைய கடைக்கண்பார்வையை மீண்டும் திருப்பியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் சான்டா கிளாராவில் நடந்த ஒரு சாப்ட்வேர்கருத்தரங்கில் கூட, சாப்ட்வேர்களை நன்கு வடிவமைக்கத் தெரிந்த இந்தியர்களை மீண்டும் அழைக்க ஒருவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சாப்ட்வேர் வளர்ச்சியில் இந்தியா "ஓஹோ"வென்று வளராவிட்டாலும், ஓரளவுதான் வளர்ந்துள்ளது. ஆனாலும்,இதற்கு முக்கியக் காரணம் சாப்ட்வேர் நிபுணர்கள் அல்ல; போதிய அளவு செலவு செய்ய முன் வராத அரசுதான்என்று கூறப்படுகிறது.
இதுபோக, இந்த சாப்ட்வேர் தொழிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் இந்தியாவில் அவ்வளவாகசெய்யப் பட்டிருக்கவில்லை. இதற்காக இன்னும் அதிக அளவு நிதி ஒதுக்கினால், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாநிச்சயம் சாப்ட்வேர் தொழிலில் உலகிலேயே "நம்பர் ஒன்" நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை என்று சாண்டாகிளாரா கருத்தரங்கில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அரசின் காதுகளில் விழுந்தால் சரி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications