சென்னைக்கு தண்ணீர் திறந்து விட ஆந்திரா சம்மதம்
சென்னை:
சென்னைக்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருந்தவேண்டுகோளை ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஏற்றுக் கொண்டுள்ளார்.
சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஈரோட்டிலிருந்து ரயில் மூலமும்,நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூரிலிருந்து ரயில் மூலம் நீர் கொண்டு வரவும் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி நீரை கொண்டு வரும் ஏற்பாடுகளில் ஜெயலலிதா இறங்கினார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சமீபத்தில் தொலைபேசியில் பேசினர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை தமிழக தலைமை செயலாளர் சங்கர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைசெயலாளர் சாந்தா ஷீலா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம் சென்னை குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாகஇயக்குநர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர் அதிகாரிகள் ஹைதராபாத் சென்றனர்.
அங்கு அவர்கள் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை நகரில் உள்ள கடுமையான குடிநீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 190 கனஅடி தண்ணீரை திறந்து விட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.
எந்தெந்த நேரத்தில், எந்தெந்த தேதியில் தண்ணீர் திறந்து விடுவது என்பதை இரு மாநில தொழில்நுட்ப அலுவலர்களும் முடிவுசெய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications