தேவாரத்தை காட்டுக்கு அனுப்பியது சரியே: வைகோ
காரைக்குடி:
வீரப்பனைப் பிடிக்க தேவாரத்தை அனுப்பியது சரியான நடவடிக்கைதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோகூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
பதவிகளை எதிர்பார்க்காமல் லட்சியப்பிடிப்புடன் செயல்படும் தோழர்கள் மதிமுகவில் மட்டும்தான் உள்ளனர்.
நாம் தனித்து இருப்பது குறித்து சிலர் கிண்டலாகப் பேசி வருகிறார்கள். சிங்கம் தனித்து தான் இருக்கும். ஆனால் அதுதான்காட்டுக்கு ராஜா. அது கம்பீரமாக நிற்கும்.
பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மீது விழும் அடிகள் அதனை கூர் ஈட்டி ஆக்கும். அதேபோல் சோதனைகளை சந்திப்பவனேசாதனைகளைப் படைக்க முடியும்.
1957 ம் ஆண்டு திமுக 124 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 15 தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் 1000, 2,000வாக்குகளே வாங்கியது. எனவே நடந்து முடிந்த தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை.
திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போய்விட்ட நிலையில் மதிமுக மட்டும்தான் எழுச்சியோடு நிற்கிறது.
தமிழக அரசு, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தேவாரத்தை காட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதற்காக தமிழக அரசைப்பாராட்டியே ஆக வேண்டும் என்று பேசினார் வைகோ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications