Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது தான் சந்திரபாபு நாயுடு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

பிற மாநில முதல்வர்களை விட எப்போதுமே ஒரு 10 கி.மீ. தூரமாவது முந்தியே இருப்பவர் சந்திரபாபு நாயுடு.

சாப்ட்வேர் ஆகட்டும், பயோ டெக்னாலஜி ஆகட்டும், நிர்வாகத்தை கம்ப்யூட்டர்மயமாக்குவது இருக்கட்டும், கிராமங்களுக்குதிட்டங்களை கொண்டு செல்வதில் ஆகட்டும் எதிலுமே அவர் எப்போதும் ஒரு படி மேலே தான் இருந்துள்ளார். அவரைப் பார்த்துகாப்பியடிக்கும் நிலையில் தான் பிற முதல்வர்கள் இருந்து வருகின்றனர்.

இப்போது யாருமே எதிர்பாராத வகையில் புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். அது தான் உலக வர்த்தக திருவிழா.துபாயில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வர்த்தகத் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து மாபெரும் வியாபாரநிறுவனங்கள் பங்கேற்பது வழக்கம். அதில் பொருள்களை வாங்க உலகம் முழுவதும் இருந்தும் நுகர்வோர்களும் வருவார்கள்.

இந்த வர்த்தக திருவிழாவை ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு.

அதிலும் இதை ஆசியாவிலேயே மிகப்பெரிய வர்த்தகக் திருவிழாவாக நடத்தவும் முடிவு செய்துள்ளார். வரும் தசரா மற்றும்தீபாவளியின்போது ஹைடெக் சிட்டியான ஹைதராபாத்தில் இந்த விழா நடக்கவுள்ளது.

தான் எதைச் செய்தாலும் அதை சர்வதேச அளவில் பேச வைத்துவிடுவார் சந்திரபாபு நாயுடு. தற்போது நடத்தவுள்ள வர்த்தகதிருவிழா குறித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஒஹில்வி அன்ட் மாத்தூர் விளம்பர நிறுவனத் தலைவர் கவுதம் முகர்ஜியும்அளித்த பேட்டி:

இந்த வர்த்தகத் திருவிழாவுக்கு "தி கிரேட் மால் ஆப் ஹைதராபாத், தி கிரேட் இன்டியன் ஷாப்பிங் அட்வன்சர்" என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் முழுவதும் நடக்கவுள்ள இந்த திருவிழா சர்வதேசத் தரம் வாய்ந்ததாக இருக்கும். துபாய், சிங்கப்பூர் மற்றும்மலேசியாவில் நடத்தப்படும் திருவிழா போல் நடத்தப்படும்.

வர்த்தகத் திருவிழா ஆந்திரப் பிரதேச அரசும், 73 வருட பழமை வாய்ந்த ஒஹில்வி அன்ட் மாத்தூர் விளம்பர நிறுவனமும்இணைந்து நடத்துகின்றன.

திருவிழாவில் உலகப்புகழ் பெற்ற பொழுதுபோக்கு அம்சங்கள், பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவையும்இடம்பெறும்.

இந்தியாவிலேயே மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையின்போது கொண்டாடப்படும்இந்த வர்த்தகத் திருவிழாவைக் காண 30 லட்சம் மக்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வருகிறது "சூப்பர் சிக்ஸ் டோர்னமென்ட்":

ஹாங்காங்கில் கொண்டாடப்பட்ட மெகா கிரிக்கெட் திருவிழா வைப் போல், "சூப்பர் சிக்ஸ் டோர்னமென்ட்" என்ற கிரிக்கெட்திருவிழாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஹைதராபாத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திருவிழாநடத்தப்படுகிறது.

இதில் டிரைவ் இன் சினிமா, நள்ளிரவு வர்த்தக நிலையம், லேசர் திரைப்படக் காட்சிகள் உள்பட பல வேடிக்கைக் காட்சிகளும்இடம்பெறும்.

இதற்காக ரூ 180 மில்லியன் முதலீடு செய்யப்படும். 6 மத்தியக்கிழக்கு நாடுகள் திருவிழாவில் பங்கேற்பதாக உத்தரவாதம்அளித்துள்ளன. இது தவிர, வேறு 10 நாடுகளும் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

சந்திரபாபு நாயுடு கூறுகையில்,

இந்த மெகா திருவிழாவுக்கு பங்குதாரர்கள், விளம்பரதாரர்கள் மூலமும், டிக்கெட் அச்சடித்து விற்பனை செய்தும் நிதிவசூல்செய்யப்படும்.

இந்தியாவிலேயே ஹைதராபாத்தான் சிறந்த நகரம் என்பதைப் பறைசாற்றும் வகையில் இந்தக் திருவிழா இருக்கும்.

ஹைதராபாத் நகரில் தங்கம், வெள்ளி, பவள, நகைகள், கைவினைப்பொருட்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. உலக அளவில்இந்தப் பொருட்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

கடந்த வருடம் நான் துபாய் சென்றிருந்த போது, ஆந்திராவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வர்த்தக நிறுவனங்களைஅதிகரிக்கவும் துபாயுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. சிங்கப்பூர் அரசும் ஹைதராபாத்துக்கு உதவி செய்வதாகவாக்குறுதி அளித்துள்ளது.

துபாயுடன் உள்ள உறவை மேம்படுத்திக் கொள்ள ஆந்திர அரசு விரும்புகிறது. துபாயில் தகவல் தொழில்நுட்ப வசதிகள்அதிகரிக்க ஆந்திரா உதவும். அதே போல் சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் வணிகத்தில் ஆந்திராவுக்கு துபாய் உதவி செய்யும்என்றார்.

எல்லா மாநிலங்களிலும் தான் முதல்வர்கள் இருக்கிறார்கள், விற்பதற்கு பொருள்களும் உள்ளன, அதை வாங்க ஆட்களும்உள்ளனர். ஆனால், அதை சர்வதேச அளவில் நடத்திக் காட்டி மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மாநிலத்தின் பெயரையும் உலகஅளவில் பறை சாற்ற எல்லா முதல்வர்களாலும் முடிவதில்லை. லோக்கல் அரசியலிலேயே நேரத்தைக் கழித்துவிடும் பல மாநிலமுதல்வர்கள் நாயுடுவைப் பார்த்தாவது திருந்தலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+