ஜூலை 1ல் யானை காணிக்கை செலுத்துகிறார் ஜெ.
ஜூலை 12ம் தேதி முதல் கண்டலேறு தண்ணீர்:
நாங்கள் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க எல்லா முயற்சிகளும், எடுத்து வருகிறோம். ஈரோட்டிலிருந்து ரயில்மூலமாகவும்,நெய்வேலியிலிருந்து லாரி மூலமாகவம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேட்டூரிலிருந்து தண்ணீர்கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையைச் சுற்றி இருக்கும் பகுதியிலிருந்து நிலத்தடி நீரைச் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம்செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை மக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து பயப்பட வேண்டாம்.
கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 190 கனஅடி தண்ணீர் திறந்து விட ஆந்திர முதல்வர் சம்மதித்துள்ளார். அடுத்தமாதம் 12ம் தேதி முதல் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
துரைமுருகன் கருத்துக்கு பதில்:
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் 13 கிலோமீட்டர் கால்வாய் வெட்டப்படாததற்கு ஆக்கிரமிப்புதான் காரணம் எனதுரைமுருகன் கருத்து கூறியிருப்பதற்கு நான் பதில் கூறவிரும்பவில்லை.
நீதிமன்ற தடையை நீக்க இவர்கள் என்ன முயற்சி செய்தனர்? கால்வாய் வெட்ட பல தடை வரத்தான் செய்யும்.
கால்வாய் வெட்டும் பணி இன்னமும் முடிவடையவில்லை. அந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனஆந்திர முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இரு மாநில அரசுக்கும் இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. எனவே இது குறித்து மேலும் கருத்துகூறவிரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.
வரைபடம் மூலம் விளக்கம்:
கிருஷ்ணா நதிநீர்பற்றி வரைபடம் மூலம் விளக்கினார் ஜெயலலிதா. தனது அறையில் இது குறித்த வரைபடத்தைஜெயலலிதா மாட்டி வைத்திருந்தார்.
அதைக் காட்டி நிருபர்களுக்கு அவர் விளக்கம் அளித்தபோது, ஆந்திராவில் செம்மனகுப்பள்ளியிலிருந்து 13கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயே வெட்டப்படவில்லை. இதற்கான திட்டமதிப்பீடும் முடியவில்லை என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications